↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இந்திய கிரிக்கெட் அணியை குறைத்து எடை போட்டுவிட முடியாது என்று ஆஸ்திரேலிய மாஜி வீரரும், இந்திய முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கூறியுள்ளார். சேப்பல் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் கங்குலியுடன் அவர் கடைபிடித்த மோதல் போக்கால் பிரபலமானார். ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா தொடர்ந்து தோல்வியை தழுவிய நிலையில், உலக கோப்பையில் அவ்வாறு இந்தியா மெத்தனமாக இருக்காது என்று சேப்பல் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து சேப்பல் அளித்துள்ள பேட்டி: இந்தியாவை எப்போதுமே குறைத்து எடை போட்டுவிட முடியாது. ஆஸ்திரேலியாவில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சிறப்பாக செயல்பட முடியாமல் போயிருக்கலாம். ஆனால், உலக கோப்பை என்று எடுத்துக் கொண்டால், அவர்கள் வேறு ஒரு அணியாக மாறியிருப்பார்கள்.
நான் சுயநலவாதிதான். எனக்கு ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும் என்பதுதான் ஆசை. இந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான வாய்ப்பு உள்ளது. மற்ற எந்த ஒரு அணியைவிடவும் ஆஸ்திரேலியா நன்கு தயாராக உள்ளது.
தென் ஆப்பிரிக்காவும் உலக கோப்பைக்கு நன்கு தயாராகியுள்ளது. நியூசிலாந்தும் சிறப்பான அணியாகவே தெரிகிறது. உள்ளூரில் விளையாடுவது நியூசிலாந்துக்கு கூடுதல் பலமாகும்.
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் பெரிதாக விளம்பரப்படுத்தப்படவில்லை. ஆனால் அவற்றையும் லேசாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் இரு அணிகளிலுமே நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவ்வாறு சேப்பல் தெரிவித்தார்.
Home
»
sports
»
sports.tamil
» இந்திய அணி பார்க்கதான் பொரி உருண்ட மாதிரி இருக்கும்.. ஆனா நல்லா விளையாடுவாப்ள.. சேப்பல் சொல்கிறார்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment