சிவகார்த்திகேயன் இன்று இந்த நிலைமையில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் தனுஷ் தான். ஆனால், சில நாட்களாகவே இருவரும் சரியாக பேசிக்கொள்வது இல்லை என ஒரு வதந்தி இருந்து வந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் காக்கிசட்டை படத்தின் இயக்குனர் துரை.செந்தில்குமார் ஒரு முன்னணி நாளிதழ் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
இதில் ’ ‘‘எதிர் நீச்சல்’ படத்துக்கே சிவகார்த்திகேயன் கேட்ட சம்பளத்தை விட அதிகமாக கொடுத்தவர் தனுஷ். அதே போல ‘காக்கி சட்டை’ படத்துக்கு சிவா கேட்ட சம்பளத்தை விட அதிகமாக கொடுத்தார் தனுஷ். அவர்கள் இருவரும் இப்போதும் நல்ல நண்பர் கள். சிவாவின் வளர்ச்சி தனுஷுக்கு பிடிக்கவில்லை என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. இதில் துளி கூட உண்மையில்லை’ என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment