↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பிரபல நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 99வது படமான டிக்டேட்டரில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். ஏற்கெனவே நயன்தாரா பாலகிருஷ்ணாவுடன் சிம்ஹா மற்றும் ஸ்ரீ ராமராஜ்யம் ஆகிய படங்களில் நடித்திருப்பது நினைவிருக்கலாம். 

தற்போது மூன்றாவது முறையாக இந்த ஜோடி சேருகின்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தை தசரா பண்டிகையையொட்டி வெளியிட முடிவு செய்யபட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீவாஸ் இயக்குகிறார். அவர் ஏற்கெனவே லக்ஷ்யம் மற்றும் லௌக்கியம் ஆகிய தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போது அவர் ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கிறார். இந்த படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது. தமன் இசையமைக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top