↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நயன்தாரா, ஹன்சிகா காலம் போல தமிழ்சினிமாவில் அக்ஷராவின் காலமும் ஒன்று வரும் போலிருக்கிறது. எப்போது ஷமிதாப் பார்த்தார்களோ, அப்போதிலிருந்தே அக்ஷராவின் கால்ஷீட் கிடைச்சா அடிச்சு தூள் பரத்திடலாம் என்று ஒரு பெரும் கூட்டமே பாலிவுட்டுக்கு தனி பிளைட் ஏறுகிற அளவுக்கு தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து போகிற எந்த அழைப்புக்கும் ஒரே பதிலைதான் சொல்லிக் கொண்டிருக்கிறாராம் அவர். என்னவென்று?
எனக்கும் தமிழ் படங்களில் நடிக்கணும்னு ஆசை இருக்கு. ஆனால் அதுக்கு முன்னாடி பாலிவுட்ல ஸ்டிராங்கா கால் பதிக்கணும். அப்படியில்லாம நான் இங்கயும் அங்கயுமா பறந்துகிட்டு இருந்தேன்னா இரண்டுமே கைக்கு வருவதில் சிக்கல் வரும். அதனால் வெயிட் ப்ளீஸ் என்கிறாராம். ஒரு இயக்குனரா முதல்ல தன்னை ப்ரூஃப் பண்ணனும் என்பதும் அக்ஷராவின் ஆசையாக இருக்கிறது.
ஒரு ஆச்சர்யமான தகவல். அக்ஷரா அப்பா பிள்ளையல்ல. அம்மா பிள்ளை! சென்னைக்கு வந்து கமலை சந்திக்க வேண்டும் என்று விரும்பினால் கூட, அப்பாவுக்கு போன் அடித்து அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டுதான் வருகிறாராம். அப்படியே வந்தாலும் அதிக பட்சம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் செலவிடுவதும் இல்லையாம்.
அவ்வளவு அட்டாச்மென்ட் இருக்கோ, இல்லையோ? அவரு நடிப்பு ரத்தத்துல ஊறி, நாளத்துல ஓடிக்கிட்டு இருக்கும்ல? அதை கொண்டாங்க மொதல்ல தமிழ்நாட்டுக்கு!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top