↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மலையாள சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பெற்ற நடிகர் மோகன்லால், தற்போது பெயர் வைக்கப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அமலா பால் மற்றும் மஞ்சுவாரியர் ஆகியோர் அவருக்கு ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் மோகன்லால் பிரபல இயக்குனர் ஐ.வி.சசி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 14 ஆண்டுகள் கழித்து ஐ.வி. சசி படத்தில் மீண்டும் மோகன்லால் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக கடந்த 2000ஆம் ஆண்டில் ஸ்ரதா' என்ற படத்தில் ஐ.வி.சசி இயக்கத்தில் நடித்த மோகன்லால், அவருடன் இணையும் 23வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய திரைப்படம் குறித்து ஐ.வி.சசி கூறியபோது, 'மோகன்லாலுடன் நான் இணையும் இந்த படம் ஒரு மாஸ் எண்டர்டெய்னர் படமாக இருக்கும். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு பிரசாந்த் மற்றும் அம்பாடி ஆகியோர் திரைக்கதை அமைத்து வருகின்றனர். இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்' என்றும் அவர் தெரிவித்தார்.

இயக்குனர் ஐ.வி.சசி தமிழில், ரஜினிகாந்த் நடித்த காளி, எல்லாம் உன் கைராசி, கமல்ஹாசன் நடித்த 'குரு', சிவகுமார் நடித்த இல்லம்', மற்றும் ஜெயராம் நடித்த 'கோலங்கள்' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top