நட்சத்திரங்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரை தங்கள் ரசிகர்களுடன் தொடர்ச்சியான உரையாடலை நடத்த பயன்படுத்துகின்றனர். ஆனால் சிலர் அதனை வக்கிரமான வழிகளில் பயன்படுத்துவது அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நடிகை நிகிதாவுக்கு அப்படியொரு நபர் தனது அந்தரங்கத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார். அதிர்ச்சியான நிகிதா, இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடாதீர்கள் என ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பிட்ட அந்த நபர் நிகிதாவுக்கு ஆபாச குறிப்புகளும் அனுப்பி வந்திருக்கிறார்.
பலர் இதேபோல் ஆபாசமான செய்தி, படங்கள் அனுப்புகிறார்கள். கண்டிப்பாக இவர்களுக்கு உதவி தேவை என்று கண்டித்துள்ளார் நிகிதா.
0 comments:
Post a Comment