↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
News
ஏர் ஏசியா எனும் விமானம் இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட க்யூ. இசட். 8501 நேற்று காணாமல் போனது. இதில்  155 பணிகள் மற்றும் 7 விமான பணியாளர்கள் பயணித்தனர். இதையடுத்து விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது இந்தோனேசியாவில் உள்ள பெலிடங் கடற்பகுதியில் விமானம் விழுந்து கிடப்பதாக நேற்று கூறப்பட்டது.ஆனால் அது உறுதிசெய்யப்படவில்லை. இந்நிலையில் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட ஆஸ்திரேலியாவின் ஓரியன் விமானம் கடலில் மிதக்கும் பாகங்களை கண்டுபிடித்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஜகார்த்தா விமானப்படை தளத்தின் தளபதியான டுவி புட்ராண்டோ,  இந்தோனேசியாவின் மத்திய கலிமந்தன் மாகாணம், பங்காலன் பன்னிலிருந்து 160 கி.மீ தூரத்தில் உள்ள நங்கா தீவில் சந்தேகப்படும்படியான பாகங்கள் மிதப்பதை ஓரியன் விமானம் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளார். இது விமானம் காணாமல் போன இடத்திலிருந்து 1120 கி.மீ. தூரத்தில் உள்ளதாக புட்ராண்டோ தெரிவித்துள்ளார். எனினும், அது ஏர் ஏசியாவின் பாகங்களா என உறுதியாக தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.
மேக மூட்டத்துடன் காணப்படும் அப்பகுதியை நோக்கி தற்போது மீட்பு படையினர் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இந்தோனேசிய தலைமை அதிகாரி, விமானம் கடலுக்கு கீழே விழுந்து கிடக்கலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top