↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கடந்த 2006ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கள்வனின் காதலி' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் லட்சுமணன் தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'ரோமியோ ஜூலியட்'. ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

பிரபுதேவா இயக்கிய 'எங்கேயும் காதல்' படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் டிரைலர் நாளை (டிசம்பர் 29) வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஜெயம் ரவிக்கு கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த பேராண்மை படத்திற்கு பின்னர் சொல்லிக்கொள்ளும்படி எந்த படமும் வரவில்லை. தில்லாலங்கடி ஓரளவுக்கு ஓடினாலும் அதன்பின்னர் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த 'எங்கேயும் காதல், ஆதி பகவன், நிமிர்ந்து நில் ஆகிய படங்கள் அவருக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. இந்நிலையில் ரோமியோ ஜூலியட் அவருக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி, ஹன்சிகாவுடன் வம்சி கிருஷ்ணா, பூனம் பாஜ்வா, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை செளந்தர்ராஜான் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top