↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் ஒருகட்டமாக நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விநாயகர் உருவம் ஒருபுறமும் மறுபக்கத்தில மகிந்தவின் படமும் பிரசுரிக்கப்பட்டதானது இந்து மதத்தினை அவமதிக்கும் செயலாகும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தனது கண்டணத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்துக் கூறுகையில்
இந்த நாட்டிலே சமத்துவமான சூழ்நிலை இல்லை என்பதற்கும் தற்போது மதப்பிரச்சினையை மேலும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கமும் கொண்டதன் ஒரு வெளிப்பாடே இந்த மிகவும் மோசமான செயற்பாடாகும்.

பிள்ளையார் உருவத்தினை இந்துக்கள் மிகவும் புனிதமாக நேசிக்கும் கடவுளாகும் அதனை உதாசீனம் செய்ததுடன் அதற்கு கீழ் வேட்பாளரது சின்னமான வெற்றிலைக்கு நேரே புள்ளடியும் இட்டு அவரது ஐ.ம.சு.கூட்டமைப்பு என கட்சியின் பெயரையும் குறித்து இருப்பதன் மூலம் இந்து கடவுளாகிய விநாயகரையும் அவரது கட்சியில் இணைத்துக் கொண்டிருப்பது மதங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாகும்.


இவ்வாறு செயற்படும் இவர் இந்த நாட்டிலே இந்துக்களில் இருந்து எவரொருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியுமா என்பதனை இவரால் கூறமுடியுமா? புனிதத்தன்மை பொருந்திய பிள்ளையார் உருவத்தினை தனது சுயலாப அரசியலுக்காக பயன்படுத்துவதனை மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன் இனிமேலாவது இந்த கீழ்த்தரமான செயற்பாட்டினை எவரும் மேற்கொள்ளக்கூடாது என்பதனை அனைவரும் புரிந்து செயற்படவேண்டும்.

எந்த அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி இந்துக் கடவுளை அரசியலுக்காக பயன்படுத்துவதனை தவிர்த்துக் கொள்வதும் மதத்தினை தங்களது தேவைகளுக்காக பயன்படுத்துவதனையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்

இவ்வாறான பொறுத்தப்பாடற்ற செயற்பாடுகளை கடும்போக்குவாதிகள் மேற்கொள்கின்ற போது இந்த மாவட்டத்தில் இருக்கும் பிரதி அமைச்சர்கள், அமைப்பாளர்கள், ஆலோசகர்கள் இதனை கருத்தில் எடுக்காதது அவர்களும் வேற்று மதத்தினை சேர்ந்தவர்கள் தான் என்ற கேள்வியினையும் கேட்க வேண்டியுள்ளது எனவும் கூறினார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top