ஆனால் நம் குழந்தை என்ற உரிமையில் பெற்றோர்கள் அவர்களை அடிப்பது, கடிந்துறைப்பது சரியல்ல. தவறே செய்தாலும் அதை பொறுமையுடன் கையாள வேண்டும்.
இல்லையேல் குழந்தைகளுக்கு உங்கள் மீது வெறுப்பு தான் வரும். எனவே அவர்களுடன் நீங்கள் நண்பனாக இருப்பது அவசியமாகும்.
கொஞ்சம் ப்ரீயா விடுங்க
குழந்தைகளை கட்டுப்படுத்துவது என்பது பெற்றோர்கள் செய்யும் பல தவறுகளில் முக்கியமான ஒன்றாகும்.
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அதிகாரம் செலுத்துவர். ஆனால் இது குழந்தைகளுக்கு பெற்றோரின் மீது அன்பை வரவழைக்காது, மாறாக பயத்தையே தரும்.
எனவே அவர்களுக்கு தரும் சுதந்திரத்தை தடுக்காமல், சரியான அளவில் குழந்தைகளுடன் கட்டுப்பாடாக இருந்தால், உங்கள் குழந்தையிடம் நீங்கள் நல்ல நண்பனாகவும் இருக்க முடியும்.
குழந்தைகளிடம் கத்தாதீங்க
உங்கள் குழந்தைகள் தவறு செய்தால் அதை பார்த்து கத்தவோ, பயமுறுத்துவோ செய்யாதீர்கள்.
அவர்களிடம் அன்புடன் எடுத்துறைத்து நல்லது எது? கெட்டது எது? என்பதை தெரியப்படுத்துங்கள்.
சப்ரைஸ் கொடுங்க
குழந்தையின் இதயத்தில் இடம் பிடிக்க, சில நேரம் அவர்களை ஈர்ப்பதற்காக, சின்ன சின்ன பரிசுகளை வாங்கிக் கொடுங்கள்.
அவர்கள் எதிர்பாராத நேரத்தில் அவர்களுக்கு பரிசினை வாங்கி கொடுத்து அசத்துங்கள்.
ஏனெனில் அப்படிப்பட்ட தருணத்தை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள், ஆனால் இதையே வாடிக்கையாக கொள்ள வேண்டாம்.
உறுதுணையாக இருங்கள்
ஒவ்வொரு தருணத்திலும் தான் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணர்ச்சி ரீதியாக உங்கள் குழந்தை உணர வேண்டும்.
அதற்கு, அவர்களுக்காக அவர்களின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் எப்போதும் அவர்களுடன் இருப்பீர்கள் என்ற உணர்வை அவர்களுக்கு முதலில் ஏற்படுத்துங்கள்.
இதற்கு உங்கள் குழந்தைகளிடம் அடிக்கடி பேசுவது அவர்களுக்காக நேரம் ஒதுக்கினால் மட்டுமே அந்த எண்ணத்தை அவர்களின் மனதில் விதைக்க முடியும்.
0 comments:
Post a Comment