↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் SICA சார்பாக கடந்த 9 வருடங்களாக சிறந்த படங்கள், கதாசிரியர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களில் சிறந்த படைப்புகளை அளித்தவர்களை தேர்ந்தெடுத்து சிகா அவார்ட்ஸ் (SICA Awards) என்ற பெயரில் விருதுகளை வழங்கிக் கொண்டு வருகிறது.

10-வது வருடத்தின் இந்தி சிகா அவார்ட்ஸ் வழங்கும் விழா மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் நகரில் உள்ள நெகரா கலையரங்கில் மாபெரும் நட்சத்திர திருவிழாவாக வரும் ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மிகப் பிரம்மாண்டமாக உலகத் தரத்தில் நடக்கவுள்ளது. 

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. இப்போது முதல் முறையாக இந்தி மொழி படங்களுக்கும் சேர்த்து விருதுகள் வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த விழாவில் தமிழ் சின்னத்திரை நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த விருதுகள் பெறும் கலைஞர்களை தேர்ந்தெடுக்க, தமிழில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் இயக்குனர்கள் பாக்கியராஜ், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, சுரேஷ் கிருஷ்ணா மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மது அம்பாட், என்.கே.விஸ்வநாதன், ராபர்ட் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படுகிறது. 



இந்த மாபெரும் நட்சத்திர கலை விழாவில் தமிழிலிருந்து கமலஹாசன், தெலுங்கு மொழியிலிருந்து பாலகிருஷ்ணா, மலையாள மொழியிலிருந்து மம்மூட்டி, மோகன்லால், கன்னட மொழியிலிருந்து புனித் ராஜ்குமார், இந்தி மொழியிலிருந்து தர்மேந்திரா ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க இருக்கிறார்கள்.

மேலும், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களும், ராதிகா, குஷ்பு, ஹன்சிகா மோத்வானி, சுருதிஹாசன் உள்ளிட்ட நடிகைகளும் இசையமைப்பாளர் இளையராஜா, விஜய் ஆண்டனி, யுவன்சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் உள்ளிட்ட இசையமைப்பாளர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். 

இந்த மாபெரும் நட்சத்திர கலை விழாவில் பிரபல நடிக-நடிகையர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகளும், பிரபல இசையமைப்பாளர்கள் பங்குபெறும் இன்னிசை கச்சேரியும் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் நட்சத்திர கலைவிழாவை இயக்குனர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி வடிவமைப்பாளராக பொறுப்பேற்று நடத்துகிறார். அவருடன் இயக்குனர்கள் சங்கத்தை சார்ந்த இயக்குனர்களும் பணியாற்றுகின்றனர்.

இந்த பிரம்மாண்ட விழாவை ஒளிப்பதிவாளர் சங்க செயலாளர் மற்றும் பெப்சி சம்மேளனத்தின் தலைவர் சிவா பொறுப்பேற்று நடத்துகிறார். அவருடன் தலைவர் என்.கே.விஸ்வநாதன், ராபர்ட், மது அம்பாட் இன்னும் பல முன்னணி ஒளிப்பதிவாளர்கள் பங்கேற்று பணியாற்றுகிறார்கள்.

இந்த விழாவின் மூலம் திரட்டப்படும் நிதியை சங்கத்தின் முதுகெலும்பாக பணியாற்றிய உறுப்பினர்களுக்கு நல நிதியும், நல உதவியும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி நிதியும் முதியோர்களுக்கு ஓய்வு ஊதியமும் மற்றும் மருத்துவ உதவி நிதியும் வழங்க திட்டமிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top