↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சென்ற அக்டோபரில், ப்ளிப் கார்ட் இணைய தளத்தில் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங்க் கேலக்ஸி கோர் ப்ரைம் (SM-G360H/DS) மொபைல்
குறித்து தகவல் வெளியிடப்பட்டது. தற்போது அது விற்பனைக்கு தளத்தில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,599. இதில் 4.5 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட, எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த பின்புற கேமரா, 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட முன்புறக் கேமரா, 14 மாநில மொழிகளுக்கான சப்போர்ட் எனப் பல சிறந்த வசதிகளைக் கொண்டுள்ளது.
இதன் ராம் மெமரி 1 ஜி.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 64 ஜி.பி. வரை உயர்த்தலாம். இதன் தடிமன் 8.8 மிமீ. இதில் எப். எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2000 mAh திறன் கொண்டது. வெள்ளை வண்ணத்தில் மட்டும் இது கிடைக்கிறது. இதன் சில்லரை விலை ரூ.11,300 எனக் குறிப்பிட்டிருந்தாலும், இதன் சந்தை விற்பனை விலை ரூ. 9,599 ஆக உள்ளது.
Home
»
»Unlabelled
» சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம் மொபைல் போன்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment