↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் பதிப்பு 10 இன்னும் சோதனை முறையிலேயே மேம்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது. ஆனால், 
கம்ப்யூட்டர் தயாரிப்பவர்கள், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம், நிச்சயம் கம்ப்யூட்டர் விற்பனையில் ஒரு மாற்றத்தைப் பெரிய அளவில் கொண்டு வரும் என எதிர்பார்க்கின்றனர். வாடிக்கையாளர்களிடம் பிரச்னைக்குள்ளான, விண்டோஸ் 8 சிஸ்டத்தைப் புறக்கணித்தவர்கள் அனைவரும், விண்டோஸ் பதிப்பு 10க்கு மாறிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகையில் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் பழையதாகிக் கொண்டிருப்பதாகவும், அவை அனைத்தும் விண்டோஸ் 10க்கான வகையில் மாற்றம் பெறும். விண்டோஸ் 10 பதிப்பின் சோதனை ஓட்டம், பல வாடிக்கையாளர்களிடம் நல்ல மதிப்பைப் பெற்றுள்ளது. எந்த விஷயங்களில் எல்லாம், விண்டோஸ் 8 ஏமாற்றியதோ, அதில் விண்டோஸ் 1-0 நிறைவான பயன்பாட்டையும், அனுபவத்தினையும் தருவதாக கருத்து பரவி வருகிறது.
நான்கு அல்லது மேற்பட்ட ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு, பழைய கம்ப்யூட்டர்களாக மாறி வருபவற்றின் எண்ணிக்கை ஏறத்தாழ 60 கோடி இருக்கலாம். இவற்றில் பல, ஹார்ட்வேர் மேம்பாட்டிற்கான தகுதி படைத்தவை இல்லை. எனவே, விண்டோஸ் 10 பயன்படுத்த புதிய கம்ப்யூட்டர்களையே வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இந்த வகையில், விண்டோஸ் 10 உடன், ஹார்ட்வேர் மேம்படுத்தலும் இணைந்து, கம்ப்யூட்டர் விற்பனையை வரும் ஆண்டில் அதிகப்படுத்தும். எனவே, விண்டோஸ் 10 பதிப்பு முழுமையாக மக்களுக்கு விற்பனைக்கு வருகையில், கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், இதற்கு அதிக ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில், பல தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் ட்ரைவர் புரோகிராம்களை, விண்டோஸ் 10க்கு ஏற்ற வகையில் மேம்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளன. 
சிப் தயாரித்து வழங்கும் நிறுவனமான ஏ.எம்.டி. (Advanced Micro Devices) தன்னுடைய, கரிஸோ (Carrizo) என்னும் பெயரிடப்பட்டுள்ள புதிய சிப்பினை, விண்டோஸ் 10ன் செயல்பாடுகளுக்கு ஏற்றவகையில் வடிவமைத்து வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டில், இதன் செயல் பண்புகள் குறித்து ஏ.எம்.டி. நிறுவனம் வெளியிடும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 

கம்ப்யூட்டர் தயாரித்து வழங்கும் நிறுவனமான டெல், இதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளது. விண்டோஸ் 8 பயனாளர்கள் சந்தித்து வரும் குறைகளை, விண்டோஸ் 10 நிச்சயம் நிறைவு செய்திடும் என டெல் எதிர்பார்க்கிறது. அது மட்டுமின்றி, வர இருக்கும் விண்டோஸ் 10, பெர்சனல் கம்ப்யூட்டரிலும் மற்றும் மொபைல் சாதனங்களிலும் அதே புரோகிராம்களை இயக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இருந்த இந்த பிரச்னை, விண்டோஸ் 1-0ல் தீர்க்கப்படுகிறது. மேலும், விண்டோஸ் 8ல் நீக்கப்பட்ட ஸ்டார்ட் பட்டன் இதில் கிடைப்பது அனைத்து பயனாளர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. குறிப்பாக, இது வர்த்தக நிறுவனங்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிறுவனங்கள் அனைத்தும் விண்டோஸ் 7 பதிப்பினை வரவேற்று மாறிக் கொண்டனர். ஆனால், விண்டோஸ் 8 க்கு மாறுவதற்கு மறுத்துவிட்டனர். 

மொபைல் சாதனங்களுக்கும், பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கும் வெவ்வேறு இன்டர்பேஸ் தந்து, விண்டோஸ் 8, அதிருப்தியை பெற்றுக் கொண்டது. 
இதுவே, நிறுவனங்கள் பல விண்டோஸ் 8 தொகுப்பிற்கு மாறாமல் இருந்ததற்குக் காரணமாய் இருந்தது. 

ஹார்ட்வேர் நிறுவனங்களுக்கு, விண்டோஸ் 10 ஒரு தீர்வினைத் தருகிறது. விண்டோஸ் 7 தொகுப்பிலிருந்து, கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் அமைப்பை எளிதாக மேம்படுத்த வழி தருகிறது.

இன்னொரு எதிர்பார்ப்பு குறித்து மக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது. விண்டோஸ் 8 வாங்கியவர்கள் மிகவும் அதிருப்தியைத் தெரிவித்ததால், அவர்களுக்கு விண்டோஸ் 10 இலவசமாக அப்கிரேட் செய்திட உரிமம் தரப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைமை அலுவலர்கள் பேச்சு, அதற்கான சாத்தியக் கூறு இருப்பதாகக் காட்டவில்லை. தங்களுக்கு இழப்பைத் தரும் ஒன்றாக, விண்டோஸ் 10 சிஸ்டத்தை வெளியிடப் போவதில்லை என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும், இது முடிவான ஒன்றாக இருக்காது. விண்டோஸ் 10 இலவசமாகவே கிடைக்கும் என, விண்டோஸ் 8 வாங்கிய பயனாளர்கள் நம்புகின்றனர்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top