↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் நிர்வாக சீர்கேடுகள் நடந்துள்ளதாக ஏற்கனவே குற்றசாட்டுகள் எழுந்தது.
இதைத் தொடர்ந்து அதனை இடைக்கால கமிட்டி நிர்வகிக்கும் என்று சமீபத்தில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 9 உறுப்பினர்களை கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரிய இடைக்கால கமிட்டி முன்னாள் வீரர் வெட்டிமுனி தலைமையில் செயல்படும் என்று இலங்கை விளையாட்டு மந்திரி நவின் திசநாயகே அறிவித்துள்ளார்.
சுனில் வெட்டிமுனி, 1975 மற்றும் 1979 ஆகிய இரு உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியவர்.
மேலும் பைலட் ஆக உள்ள வெட்டிமுனி, 1996ம் ஆண்டு உலகக்கிண்ணம் வென்ற இலங்கை அணியை அழைத்து வர விமானத்தை ஓட்டிச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top