↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பொதுவாக திரையுலகில் நடிகைகளை பொறுத்தவரையில் 30வயது ஆகிவிட்டால் ஓரம் கட்டிவிடும் வழக்கம்தான் உண்டு. ஆனால் 30ஐ தாண்டியும் நம்பர் ஒன் நடிகையாக ரேஸில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். விரைவில் அவர் நடித்த ஏழு படங்கள் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

ஹரி இயக்கிய 'அய்யா' படத்தில் அறிமுகமான நயன்தாரா, அதன் பின்னர் ரஜினியுடன் 'சந்திரமுகி', அஜீத்துடன் பில்லா, விஜய்யுடன் வில்லு போன்ற பல படங்களில் நடித்து நம்பர் ஒன் நடிகையாக தொடர்ந்து பத்து வருடங்கள் தாக்கு பிடித்து வருகிறார்...
நயன்தாரா நடித்த 'நண்பேண்டா, பாஸ்கர் தி ராஸ்கல், மாஸ், மாயா, இது நம்ம ஆளு, தனியொருவன், மற்றும் நானும் ரவுடிதான் ஆகிய ஏழு படங்கள் இவ்வருடம் அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.. மேலும் நயன்தாராவுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால் மேற்கண்ட ஏழு படங்களும் தெலுங்கிலும் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது...
நயன்தாராவின் இந்த 7 பேக்கில் எத்தனை படங்கள் சூப்பர் ஹிட் ஆகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top