↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் அதன்பின்னர் நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு போன்ற வெற்றி படங்களை தயாரித்து தமிழின் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

'பாண்டிய நாடு' படத்தை அடுத்து மீண்டும் விஷாலுடன் இணைந்து தற்போது 'பாயும் புலி' என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று நிலையில், சுசீந்திரன் 'பாயும் புலி' படக்குழுவினர்களுடன் நேற்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அவருக்கு விஷால், காஜல் அகர்வால் உள்பட பாயும் புலி' படக்குழுவினர் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். சுசீந்திரனின் நெருங்கிய நண்பரும் 'பசங்க' இயக்குனருமான பாண்டியராஜும் நேரில் சுசீந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

'பாயும் புலி' படத்தை இயக்கி வருவதோடு, சுசீந்திரன் 'நேருக்கு நேர்' என்ற படத்தை தயாரித்தும் வருகிறார். இந்த படத்திற்கு அரோரா' என்பவர் இசையமைக்கின்றார். இவர் ஏற்கனவே "கல்யாண சமையல் சாதம்' என்ற படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் இயக்கி வரும் இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண், ஸ்ருஷ்டி டாங்கே, உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top