↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே ஆம் ஆத்மி முன்னணியில் இருந்து வருகிறது. அக்கட்சி 17; பா.ஜ.க. 9; காங்கிரஸ் 3 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. டெல்லியில் கடந்த 2013 இறுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் 28 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி 8 இடங்களை பிடித்த காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது.
ஜன்லோக்பால் மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்ய முடியாமல் போனதற்காக முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் விலகினார். இதன் பின்னர் டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அத்துடன் புதிய அரசு அமைவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில் சட்டசபை கலைக்கப்பட்டு கடந்த 7-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இம்முறை ஆட்சியை பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆம் ஆத்மி கட்சியினர் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினர்.
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து டெல்லியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பாரதிய ஜனதாவும் தீவிரம் காட்டியது. இருப்பினும் தொடர்ந்து வந்த கருத்து கணிப்புகள் பலவும் இம்முறை ஆம் ஆத்மி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்தன. டெல்லியில் மொத்தம் 673 வேட்பாளர்கள் களத்தில் குதித்தனர். டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி தொகுதியில் அதிகபட்சமாக 18 பேர் போட்டியிட்டனர்.
தெற்கு டெல்லியில் அம்பேத்கர் நகர் தொகுதியில் குறைந்தபட்சமாக 4 பேர் போட்டியிட்டனர். பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி கிருஷ்ணா நகர், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் களம் கண்டனர். அதே போல் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜய்மக்கான சதார் பஜார் தொகுதியில் போட்டியிட்டார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஸ்டா முகர்ஜி கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்டார்.
டெல்லியில் இம்முறை வரலாறு காணாத வகையில் 67% வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளிலும் ஆம் ஆத்மிக்கு சாதகமாகவே இருந்தது. இதனால் டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. டெல்லி முழுவதும் உள்ள 14 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. பிற்பகல் ஒரு மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Home
»
news
»
news.india
» டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆம் ஆத்மி -17; பா.ஜ.க- 9; காங். 3-ல் முன்னிலை!!
Recent Posts
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
அப்பீலுக்கு மேலே அப்பீல்: ஜெயாவை பிடித்து உள்ளே போட முயற்சி.... பலிக்குமா முயற்சி?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதல[...]
முதல்வர் ஓ.பி.எஸ். ராஜினாமா எப்போது?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் இன்னமும் முதல்வர் ஓ.பன[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.