டங்காமாரி ஊதாரி' மற்றும் டண்டனக்கா'...
சமீபத்தில் ரிலீஸான பாடல்களில் சூப்பர் ஹிட் ஆன பாடல்களில் இரண்டு பாடல்கள் 'டங்காமாரி ஊதாரி' மற்றும் டண்டனக்கா' என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த இரண்டு பாடல்களையும் எழுதிய சென்னையை சேர்ந்த ரோகேஷ், சமீபத்தில் தான் சினிமாவுக்கு பாட்டெழுதிய அனுபவங்கள் குறித்து பேட்டியளித்துள்ளார்.
2013ஆம் ஆண்டில் இருந்தே தனது நண்பர்களின் ஆல்பத்திற்கு பாட்டெழுதி கொடுத்ததாகவும், அந்த பாடல்கள் நன்றாக ரீச் ஆனதை அடுத்து கே.வி.ஆனந்த் படத்திற்கு பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறினார்..
மேலும் அஜீத்தின் என்னை அறிந்தால்' படத்தில் ஒரு பாட்டெழுத கவுதம் மேனனிடம் இயக்குனர் கே.வி.ஆனந்த் தன்னை ரெகமண்ட் செய்ததாகவும், அந்த நேரத்தில் அவர் தனக்கு போன் செய்தபோது தன்னுடைய போன் ரிப்பேர் ஆனதால், தன்னால் அந்த படத்திற்கு பாட்டெழுத முடியாமல் போய்விட்டதாகவும் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
சிறுவயதில் இருந்தே தான் தல அஜீத்தின் ரசிகனாக இருந்ததாகவும் குட்டித்தல' பிறந்த நாளில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரத்த தானம் செய்ததாகவும், அவர் மேலும் தனது பேட்டியில் கூறினார்...
மேலும் ரோமியோ ஜூலியட்' படத்திற்காக படக்குழுவினர் கூறிய கான்செப்ட்டை வைத்து 'டண்டனக்கா' பாட்டெழுதி கொடுத்ததாகவும், ஆனால் அந்த பாடல் இந்தளவுக்கு பெரும் பிரச்சனையாகும் என்று தான் நினைத்து கூட பார்க்கவில்லை என்றும் அவர் தன் பேட்டியில் கூறியுள்ளார்...
0 comments:
Post a Comment