↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தலைவா, சைவம் படங்களை அடுத்து இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள 'இது என்ன மாயம்' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்த படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே மே 1ஆம் தேதி சூர்யாவின் மாஸ்' ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது அந்த படத்துடன் விஜய்யின் படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், காவ்யா ஷெட்டி, அம்பிகா, நவ்தீப், பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.எல்.விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தை அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார்.

ராதிகா சரத்குமாரின் 'மேஜிக் பிரேம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக விரைவில் நடைபெறும் என்றும், இசை வெளியீட்டு தேதி இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top