↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஐ.எஸ் அமைப்பில் இணைவதற்காக ஜேர்மனியை சேர்ந்த 9 பள்ளி மாணவிகள் உட்பட 70 பெண்கள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஜேர்மனி அரசியலைமைப்பு பாதுகாப்பு துறையின் தலைவரான ஹான்ஸ் ஜார்ஜ் மாசென்(Hans-Georg Maassen) கூறுகையில், ஐ.எஸ் அமைப்பில் இருக்கும் சொகுசான வாழ்க்கையை பற்றி இணையதளங்கள் மூலம் வசீகரமான வாசகங்களுடன் கட்டுரைகள் எழுதி வெளியிடப்படுகிறது.
அவற்றை பார்த்து பல பெண்கள் மயங்கி தீவிரவாதிகளின் வலையில் வீழ்கிறார்கள்.
இணையதளம் மூலமாக பெண்களை ஜிகாதிகளாக மாற்ற ஐ.எஸ் தீவிரவாதிகள் முயற்சித்து வருவது ஒன்றும் புதிதல்ல.
ஆனால் இதுபோன்ற மூளைச்சலவை செய்யப்பட்ட பெண்கள் தீவிரவாதிகளின் பகுதிகளுக்குள் சென்றவுடன் அவர்களுடைய கடவுச்சீட்டுகள் மற்றும் கைப்பேசிகள் பறிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஜேர்மனி நாட்டை சேர்ந்த பெண்களையும் ஜிகாதிகளாக மாற்ற தற்போது ஐ.எஸ் தீவிரவாதிகள் குறிவைத்திருப்பதாகவும், நாட்டை விட்டு வெளியேறியுள்ள பெண்களில் 40 சதவிகிதத்தினர் 25 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜேர்மனி பொலிசாருக்கு உதவி வரும் மார்வன் அபூ டாம்(Marwan Abou-Taam) என்பவர் கூறுகையில், ஐ.எஸ் தீவிரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்படும் பெண்களில் பெரும்பாலானோர் கல்வியில் பின் தங்கியவர்கள்.
மேலும், அந்த பெண்கள் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்து வருவதும், சமூகத்திலிருந்து தாங்கள் விலக்கி வைக்கப்படுவதாக கருதுவதும் தான் அவர்களுக்கு அபாய எண்ணங்களை வரவழைக்கின்றது என கூறியுள்ளார்.
இதற்கிடையே ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்காக ஜேர்மனியை விட்டு வெளியேறியவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 650 ஆக அதிகரித்துள்ளது என புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top