↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'என்னை அறிந்தால்' படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் 
யூடியூப் வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே 10 லட்சம் பார்வையாளர்களையும், 50000க்கும் மேற்பட்ட லைக்குகளையும் அள்ளி அந்த டீசர் சாதனை படைத்த்து. தற்போது மேலும் ஒரு சாதனையாக இந்திய அளவில் அதிக லைக்குகளை அள்ளிய டீசர் என்ற புதிய சாதனையை சற்று முன் படைத்துள்ளது.

'என்னை அறிந்தால்' டீசருக்கு தற்போது 68000 லைக்குகள் கிடைத்துள்ளது. 29 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதுவரை வெளிவந்துள்ள டீசர்களிலேயே இந்திய அளவில் அதிகமான 'லைக்குகள்' பெற்று, ஒரு புதிய பரபரப்பை இந்த டீசர் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டீசர் விவகாரத்தில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. 

தற்போது 'என்னை அறிந்தால்' டீசர் சாதனை மேல் சாதனை படைத்து வருவதால் அதை தாங்கிக் கொள்ள முடியாத விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் 'என்னை அறிந்தால்' டீசரைக் கிண்டலடித்து பல 'மீமீ'க்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து 'என்னை அறிந்தால்' டீசர் சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்குப் பிறகு விஜய்தான் சூப்பர் ஸ்டார் என விஜய் ரசிகர்கள் சொல்லி வரும் நிலையில் 'என்னை அறிந்தால்' டீசர் மூலம் இந்திய அளவில் தானும் ஒரு சூப்பர் ஸ்டார் தான் என அஜித் நிரூபித்து வருகிறார்.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top