↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ் சினிமாவில் என்றும் ப்ளே பாய் இமேஜ் உள்ளவர் ஆர்யா. ஆனால், ரியல் ஃலைபில் அவர் பக்கா ஜெண்டில் மேன். அதனால் தான் எப்போதும் அவரை சுற்றி பெண்கள் இருந்து கொண்டே இருக்கின்றனர். நடிகர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் வளர்ந்து விட்டால், அவர்களுடன் ஈகோ என்ற அறியாமை மரமும் வளர்ந்து விடும்.
ஆனால், ஈகோ என்பது துளி அளவும் கூட இல்லாமல் அனைவரிடத்திலும் அன்பாக கலகலப்பாக இருக்க கூடியவர் தான் ஜாமி என்கின்ற இந்த ஆர்யா. இன்ஜினியரிங் படித்து விட்டு அமெரிக்க வேலையெல்லாம் விட்டு, சினிமாவில் எப்படியாவது ஹீரோவாக வேண்டும் என்று போராடினார்.
தோல்வியை மட்டும் சந்தித்து வந்த அவருக்கு இயக்குனர் ஜீவா உள்ளம் கேட்குமே என்ற படத்தின் மூலம் ஒரு அறிமுகம் கொடுத்தார். அதை தொடர்ந்து அவரது நண்பர் விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
ஆனால், இதன் பிறகு இவர் நடித்த பல படங்கள் தோல்வியை தான் தழுவியது. இதன் பிறகு தமிழ் சினிமாவில் விக்ரம், சூர்யா என்ற சிறந்த நடிகர்களை உருவாக்கிய இயக்குனர் பாலா நான் கடவுள் படத்தின் மூலம் ஆர்யாவிற்கு மறுபிறவி கொடுத்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இதுவரை தமிழ் சினிமாவில் கெஸ்ட் ரோலில் நடித்த ஹீரோவில் யார் அதிகம் என்று கருத்து கணிப்பு எடுத்தால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாக அது ஆர்யா தான் என்று. காதல் சொல்ல வந்தேன், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி, ஜீவா, மாயகண்ணாடி, போன்ற படங்களில் நட்பிற்காகவே நடித்தார். ஒரு பக்கம் அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்து விட்டு, மற்றொரு பக்கம் விஜய்யுடம் நடிக்க வேண்டும் என்று கூறினார். அது தான் ஆர்யா ஸ்பெஷல்.
அதனால் தான் என்னவோ தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களுக்கும் பிடித்த ராஜாவாக இருக்கிறார். ஆனால், இவருக்கான ராணி தான் யார் என்று இன்னும் யாருக்கும் தெரியவில்லை. அவர் எப்போதும் இது போல ப்ரண்ட்லியாக அனைவரிடத்திலும் ஜாலி பாயாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
கடந்த வருட கருத்து கணிப்பில் பெண்களில் ட்ரீம் பாய் லிஸ்டில் முதலிடத்தில் வந்தவர் ஆர்யா. அவர் இதேபோல் என்றும் முதல் இடத்தில் தொடர வேண்டும், அவர் நடிக்கும் அத்தனை படங்களும் வெற்றியடை  வாழ்த்துக்கள்... ஹாப்பி பெர்த்துடே ஜாமி.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top