↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள்பிடித்து அனுப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, இஸ்லாமிய நாடுகளை உருவாக்க துடித்து வருகிறது, மேலும் ஈராக்கின் பல பகுதிகளையும் இந்த அமைப்பு கைப்பற்றியுள்ளது.
இந்த அமைப்பில் சேர்ந்து எதிரிகளை கொல்வதற்காக புனித போராளிகள் என்ற பெயரில் பல நாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் ஈராக் செல்கின்றனர்.
சமீபத்தில் இந்தியாவில் இருந்து சென்ற சில வாலிபர்கள், அந்த வாழ்க்கை பிடிக்காமல் தாயகம் திரும்பினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே தாங்கள் ஈர்க்கப்பட்டு சென்றதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து சமூக வலைத்தளங்களை உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வந்தது. பன்னாட்டு பாதுகாப்பு அமைப்புகளும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த சேனல்-4 அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதில், மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற நபர், @shamiwitness என்ற டுவிட்டர் கணக்கின் மூலமாக பலரையும் மூளைச்சலவை செய்து வந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த மேதி பிஸ்வாஸ், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால் பெங்களூரிலுள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது டுவிட்டர் அக்கவுண்டில் 17,700 ஃபாலோயர்கள் உள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்துள்ள 3ல் 2 பங்கு பேர் இவரது டிவிட்டர் கணக்கை ஃபாலோ செய்பவர்கள்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் ஆயிரக்கணக்கான டிவிட்டுகளை இவர் வெளியிடுவார். அவை அனைத்தும், தீவிரவாத நோக்கம் கொண்டதாகவும், இஸ்லாமியர்களை பாவப்பட்டவர்களாக காண்பிப்பதாகவும் இருக்கும் என்று அந்த சேனல் வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் வெளியாகிய நிலையில் டுவிட்டர் கணக்கை அந்த நபர் மூடியுள்ளார். அதே நேரம் இவரது பேஸ்புக் பக்கத்தில் ஜோக்குகளும், சினிமா பிரபலங்கள் குறித்த ரசனைகளும் உள்ளன.
சாதாரண மனிதரை போல வெளி உலகிற்கு காண்பித்துவந்த, மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் உள்ளுக்குள் மிகப்பெரிய திட்டத்துடன் இருந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து இந்திய பாதுகாப்பு துறையும் விசாரணையை தொடங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top