↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜெயப்ரதாவுக்கு ஷாக் கொடுத்த ரஜினி - Cineulagam


நினைத்தாலே இனிக்கும் உட்பட பல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்திருப்பவர் ஜெயப்ரதா. இவர்களின் நட்பு பற்றி நாம் சொல்லி உங்களுக்கு தெரிய போவதில்லை.
சமீபத்தில் நட்பு ரீதியாக ஜெயப்ரதா, ரஜினியை லிங்கா படத்தின் படப்பிடிப்பில் சந்தித்துள்ளார். அப்போது தான் தயாரித்து கொண்டிருக்கும் “உயிரே உயிரே” படத்தின் முன்னோட்டத்தை காண்பித்துள்ளார்.
படத்தை பார்த்து பாராட்டிய சூப்பர்ஸ்டார் உயிரே உயிரே படத்தின் முன்னோட்டத்தை தன் படம் லிங்கா வெளியாகும் திரையரங்குகளில் இணைக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்ட ஜெயப்ரதா அப்படியே ஷாக் ஆகிவிட்டாராம். உயிரே உயிரே படத்தில் நடிகை ஜெயப்பிரதா அவர்களின் மகன் சித்து கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ராஜசேகர் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top