↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad காவியத்தலைவன் படத்தில் நடித்த வேதிகாவுக்கு சொல்லும்படி வாய்ப்புகள் இல்லை. ஆரம்பத்தில் வேதிகாவுக்கு தொடர்ச்சியாக தோல்வி படங்கள் கிடைத்ததால், வேண்டாம் இந்த வேஷம்னு கலைத்துப்போட்டுவிட்டு இங்கிலாந்துக்கு மேற்படிப்புக்காக பறந்துவிட்டார். விடாமல் துரத்திய சில இயக்குனர்கள் அவருக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக அழைத்தனர். படிப்புதான் முக்கியம் நடிப்பு வேண்டாம் என்று முகத்தை திருப்பிக்கொண்டார். பரதேசி வாய்ப்பு வந்தபோது, ஒருவழியாக மனதை மாற்றிக்கொண்டு நடிக்க வந்தார்.காவியத்தலைவன் படத்தில் வேதிகாவின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் கோலிவுட்டில் அவருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. 

ஆனால் மல்லுவுட் கதவு இவருக்காக திறந்தே இருக்கிறது. ‘கசின்ஸ்' படத்தில்  குஞ்சக்கோ போபன், இந்திரஜித் ஆகியோருடன் நடித்து வருகிறார். இதற்கு முன் நடித்த ‘சிங்காரவேலன்‘ படத்தில் இளவரசியாக நடித்த வேதிகா, ‘கசின்‘ படத்திலும் இளவரசி வேடமே ஏற்றிருக்கிறார். கம்பெனி ஆர்டிஸ்ட் என்பதுபோல் மல்லுவுட் கம்பெனி இளவரசி என்று குஞ்சக்கோ உள்ளிட்ட நடிகர்கள் அவரை நக்கலடிக்கிறார்களாம். இதை அறிந்து வேதிகா வருத்தப்பட்டதாக அவருக்கு நெருங்கியவர்கள் கூறினர். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top