↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜீத்-அர்ஜுன் ஜோடிக்கு ஒரு மங்காத்தா போலவும், அஜீத்-ஆர்யாவுக்கு ஒரு ஆரம்பம் போலவும், இந்த என்னை அறிந்தால் படத்தின் அஜீத்-அருண் விஜய் காம்பினேஷனும் வொர்க்-அவுட்டாகும் என்று எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறார் அருண் விஜய்.
அஜீத் தமக்கு இணையாக ஒரு நடிகரை தேர்ந்தெடுத்து நடிக்க அனுமதிக்கிறார் என்றால் அவர்களுக்கு படத்தில் மிக அழுத்தமான கதாபாத்திரம் இருக்கும் என்பது அனைரும் அறிந்த உண்மை. இதில் கெட்டப்பை மாற்றி உடல் செட்டப்பையும் மாற்றி மிக ஆர்வமாக, முதன் முறையாக வில்லனாக நடிக்கிறார் அருண்விஜய்.
ஏற்கனவே அருண் விஜயின் பாடி பில்டிங் வியக்கும் படியாகத் தான் இருக்கும். இதில் அவர் மேலும் வொர்க் அவுட் செய்ததில் பாடி பில்டிங் ஏகத்துக்கும் எகிறி உள்ளதாம். அஜீத் அருண் விஜய் பாடியை தொட்டு தொட்டுப் பார்த்தது எப்படி என்று கேட்டு பூரித்துப் போகிறாராம். என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் முடியவுள்ள நிலையில் படத்தின் டீசர் இனி தியேட்டர்களிலும் வெளியாக உள்ளதாம். இந்தச் செய்தி அஜீத் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top