நமக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று தான் வடிவேலு சினிமா, அரசியல் என அனைத்தையும் விட்டு ஒதுங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று நடந்த இவரது மகன் திருமணத்தில் பெரிய சலசலப்பே ஏற்பட்டது.
வடிவேலு மகன் சுப்பிரமணிக்கும் திருப்பு வனத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வி.புவ னேஸ்வரிக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்கள் திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடந்தது இந்த திருமணத்துக்கு நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் யாரும் அழைக்கப்படவில்லை.
அவரின் சொந்த ஊரான ஐரா நல்லூர் ஊரைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். வடிவேலு தாயார் சரோஜினி அம்மாள், இரண்டு அக்காள்கள், மூன்று தம்பிகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் குடும்பத்துடன் வந்து இருந்தனர்.
இந்நிலையில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் மதுரை தல்லாகுளம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் திருமண மண்டபத்திற்குள் திடீரென புகுந்தனர். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மணமகள் புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.
அவர் மைனர் பெண் என்றும், பணத்துக்காக அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தை நடத்துவதாக போலிஸார் தரப்பில் கூறப்பட்டது. பின் புவனேஸ்வரிக்கு 18 வயது பூர்த்தியாகி 7 மாதங்கள் ஆகிவிட்டன என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் நிம்மதியாக இருக்ககூடாது என்று தான் சிலர் இப்படி செய்து வருகின்றனர் என்று வடிவேலு தரப்பில் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.