நீங்கள் படித்தது சரிதான். சுண்டல்காரர்கள் இல்லை, கிண்டல்காரர்கள்தான். அஞ்சான் வெளியாகி பல்பு வாங்கியதும் இணையத்தில் லிங்குசாமியை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். முக்கியமாக படம் வெளியாகும்முன் அவர் ஒரு பேட்டியில், அஞ்சானில் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கியிருக்கேன் என்று கூறியிருந்தார். கிண்டல் செய்தவர்கள், மொத்த வித்தையையும் இறக்கியிருக்கேன் என்பதை வைத்தே அவரை நோகடித்தனர்.
லிங்குசாமி மீம்ஸ் என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்த ஒரு குழு, லிங்குசாமியை கலாய்ப்பது ஒன்றையே முக்கிய பணியாக மேற்கொண்டது.
இந்நிலையில் பிரபல நாளிதழுக்கு பேட்டிளித்த லிங்குசாமி, தன்னை கிண்டல் செய்தது பற்றி வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஒருநாள் பள்ளியிலிருந்து திரும்பிய அவரது பிள்ளைகள், அய்யா, உங்களை இந்த மாதிரி பேசுறாங்கய்யா என்று சொன்னபோது லிங்குசாமி மிகுந்த வருத்தத்துக்குள்ளானாராம்.
இந்த செய்தியை படித்த லிங்குசாமி மீம்ஸ் ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கியவர்கள், தங்கள் பக்கத்தில் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர். அந்த ஃபேஸ்புக் பக்கத்தையே நீக்கிவிடுவதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.
அளவுக்கு மீறினால் அமுதமே நஞ்சாகும் போது அவதூறு மட்டும் அமுதமாகுமா என்ன.
0 comments:
Post a Comment