↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் டீசர் சந்தோஷத்தில் இருந்தே தல ரசிகர்கள் வெளியே வரவில்லை. அதற்குள் இப்படத்தின் ஒரு பாடல் இன்று வெளிவந்துள்ளது. கௌதம் மேனன், ஹாரிஸ் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்ததால் மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது.
நேற்று இப்பாடல் முழுமையாக கிடைக்காமல் ரசிகர்கள் தவித்து வந்தனர். பின் சோனி நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. கானா பாலா, விஜய் பிரகாஷ் இணைந்து பாடிய இப்பாடலுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளை எழுதியுள்ளார்.
டங்கமாரி என்ற செம்ம குத்து பாடல் கொடுத்த ஹாரிஸ் இந்த பாடல் அதிலும் முதன் முறையாக தலயுடன் இணைந்துள்ளதால் பொறி தெறிக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால், கொஞ்சம் ரசிகர்களை ஏமாற்றி தான் உள்ளார் ஹாரிஸ்.
வரிகள் இப்போது உள்ள யூத் ட்ரண்டிற்கு இருந்தாலும், இன்னும் கொஞ்சம் நன்றாக இசையமைத்திருக்கலாம் என்று ரசிகர்களே கூறி வருகின்றனர். சில பேர் திரையில் காணும் போது பட்டையை கிளப்பும் என கூறுகின்றனர். எது, எப்படியோ வழக்கம் போல் தல ரசிகர்களுக்கு பாடல் பிடித்து தான் உள்ளது. அவர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி தான் வருகின்றனர்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top