↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad 1 பந்து 4 ரன் 1 விக்கெட் என்ற திகில் படத்தில் பேயாக நடித்திருக்கிறார் ஹாசிகா தத். பேயாக நடிக்க தனி தைரியம் வேண்டும் என்கிறார் 

ஹாசிகா. மேலும் அவர் கூறியதாவது: எந்த ஒரு நடிகையும் தான் நடிக்கும் படத்தில் அழகாக தெரிய வேண்டும் என்றுதான் நினைப்பார். பேயாக நடிக்கும்போது அழகாக தோன்ற முடியாது. அப்படி நடிப்பதற்கு துணிச்சல் வேண்டும். நான் நடித்தேன். அழகாக நடித்த அதே நேரத்தில் அகோரமாகவும் நடித்தேன்.


இனி வரும் படங்களில் கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறேன். ஆனால் நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன். எல்லா நடிகைக்கு நடிச்சு சம்பாதிச்சு வீடு கார், பங்களா வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கு சினிமாவில் நிறைய சம்பாதித்து ஒரு தயாரிப்பாளராக வர வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. எங்கு சம்பாதித்தோமோ அங்குதானே முதலீடு செய்ய வேண்டும். நான் சினிமா தயாரிக்கும்போது திறமையான புதுமுக இயக்குனர்கள், நடிகர்களுக்கு வாய்ப்புத் தருவேன் என்கிறார் ஹாசிகா.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top