பிரித்தானியாவை சேர்ந்த கெய்த் மார்ட்டின் (Keith Martin Age-44) என்ற நபர் உலகின் மிக குண்டான மனிதராக அறியப்பட்டவர். இவரின் அதிகபட்ச எடை 444.5 கிலோ.
இந்நிலையில் தனது உடல் எடையின் காரணமாக நடக்க முடியாத இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வயிற்றின் முக்கால்பகுதி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
மேலும் இவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், மருத்துவர்களின் சிகிச்சை பெற்றும் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், எடை குறைப்பு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிருடன் இருந்திருந்தால் மேலும் எடை குறைந்து வழக்கமான மனிதர்களைப் போல அவர் நடமாடியிருக்க முடியும் என்றும் துரதிருஷ்டவசமாக அவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment