↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மெட்ராஸ் படத்திற்கு பிறகு உற்சாகமாக மீண்டும் சினிமாவில் கலைக்கட்ட தொடங்கிவிட்டார் கார்த்தி. இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கொம்பன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தின் எடிட்டிங் இன்னபிற வேலைகளும் முடியும் தருவாயில் உள்ளதால் கொம்பனை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுவருகிறது தயாரிப்பு நிறுவனம்.


இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக வெற்றி நாயகியான லட்சுமி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்கிரண், கோவை சரளா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. பருத்திவீரன் படத்திற்கு பிறகு கார்த்தி நடிக்கும் இரண்வாது கிராமத்து கதை இதுதான். ஏற்கனவே பொங்கல் ரேஸுக்கு தயாராக உள்ள விக்ரமின் ஐ, அஜித்தின் என்னை அறிந்தால் படங்களுக்கு திரையரங்கம் கிடைப்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் தற்போது கொம்பனும் அந்த லிஸ்டில் இணைந்துவிடும் போலிருக்கிறது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top