↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்காக இதுவரை செய்யாத பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறாராம். இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய், இரண்டு கேரக்டருக்கும் நிறைய தோற்ற வித்தியாசம் காட்டவிருக்கிறாராம். ஃபேன்டஸி படமாக உருவாகும் இப்படத்தில், இரண்டு காலகட்டங்களில் கதை நிகழ்கிறது.
அதாவது ஒன்று மன்னர் கால சரித்திரப்படம். மன்னர் காலகட்டத்தில் நடிக்கும் விஜய் குள்ள மனிதராக நடிக்கிறார் என்ற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த குள்ள விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறாராம். மன்னர் யுகத்தின் சாம்ராஜ்ஜியம் ஒன்றின் ராணியாக ஸ்ரீதேவியும், அவரது தளபதியாக சுதீப்பும் நடிக்கிறாராம். இந்த எபிசோடுக்கான படப்பிடிப்புதான் தற்போது நடைபெற்று வருகிறது. மற்றொன்று சமகாலப்படம்.
இது படத்தின் இரண்டாம் பாதியில் வரும் கதை. இந்த இரண்டாவது விஜய் கேரக்டர் ரொம்பவும் மாடர்னாக உருவாக்கப்பட்டிருக்கிறதாம். ஹேர்ஸ்டைல், டிரெஸ்ஸிங் என எல்லாவற்றிலும் இதுவரை பார்க்காத ஸ்டைலான விஜய்யைப் பார்க்கலாம் என்கிறார்கள். இந்த கேரக்டருக்காக கான்டாக்ட் லென்ஸும் அணிந்து நடிக்கிறாராம் விஜய். இந்த கேரக்டருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். விஜய் 58 படத்தின் பட்ஜெட்டில், கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு பெரும்தொகையை செலவு செய்திருக்கிறாராம் தயாரிப்பாளர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top