↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஹீரோயின்களுக்குள் போட்டி வெளிப்படையான விஷயம். வீட்டுக்குள்ளேயே ஒரு போட்டியாளர் இருந்தால் டென்ஷன்தான். ஸ்ருதி ஹாசனின் நிலைமை அப்படித்தான் ஆகி இருக்கிறது. தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் சக ஹீரோயின்களுக்கு சரிபோட்டி கொடுத்து வருகிறார் ஸ்ருதி. இவர்களுடன் சொந்த ரத்தமும் போட்டிக்கு வந்திருப்பது சுவையும், டென்ஷனும் கலந்த விஷயம். ஸ்ருதியின் தங்கை அக்ஷராவுக்குத்தான் இவ்வளவு பில்டப்பும். டைரக்டராகத்தான் ஆகப்போகிறேன் என்று கேமராவுக்கு பின்னால் ஒதுங்கி இருந்தவரை பாலிவுட் இயக்குனர் பால்கி கேமராவுக்கு முன்னாடி அழைத்து வந்திருக்கிறார். ‘ஷமிதாப்' இந்தி படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமாகிறார் அக்ஷரா. முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.

அக்ஷராவை பற்றி பால்கி கூறும்போது, ‘கமல்ஹாசன் குடும்பத்துக்கு நடிப்பு ரத்தத்திலேயே ஊறிப்போன விஷயம் என்பதை நிரூபித்திருக்கிறார் அக்ஷரா ஹாசன். இன்னும் சொல்லப்போனால் நடிப்புக்கென்றே பிறந்தவர் எனவும் அக்ஷராவை குறிப்பிடலாம். அமிதாப்&தனுஷ் என்ற இரு போட்டி நடிகர்களுடன் அறிமுகமாகிறோம் என்ற பயம் கொஞ்சமும் இல்லாமல் அவர்களுக்கு ஈடுகொடுத்திருக்கிறார். இதற்கு முன் கேமரா முன் நடித்து அனுபவம் இல்லாவிட்டாலும் இயற்கையான நடிப்பை கொட்டி இருக்கிறார். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் சக ஹீரோயின்கள்தான் தனக்கு போட்டி என்று எண்ணிக்கொண்டிருந்த ஸ்ருதிக்கு சரிபோட்டி தருபவராக அக்ஷரா வந்திருக்கிறார். இவரையும் ஸ்ருதி சமாளித்தாக வேண்டும் என்ன செய்யப்போகிறாரோ?' என்றார்.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top