↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நடிகர், நடிகைகளில் சம்பளம் ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். சம்பளத்தை குறைப்பார்களோ இல்லையோ தவறாமல் உயர்த்திவிடுவர்.
அந்த வகையில் பாலிவுட் நடிகர்களின் சம்பளம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதில் முதல் இடத்தில் இருப்பவர் சல்மான் கான். இவருடைய சம்பளம் 60 கோடி. அடுத்து அமீர்கான் 45 கோடியும், ஷாருக்கான் 35 கோடியும், ஹிருத்திக் ரோஷன் 25 கோடியும், அஜய் தேவ்கன் 18 கோடியும், ஜான் ஆபிரகாம், ரன்பீர் கபூர் ஆகியோர் 15 கோடியும், அமிதாப் பச்சன் 10 கோடியும் பெறுகின்றனர்.
அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சனும் 10 கோடி பெறுகிறார். நடிகைகளில் கரினா கபூர் 12 கோடி பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் 10 கோடி கேட்கிறார். பிரியங்கா சோப்ரா 8 கோடி, தீபிகா படுகோனே 5 கோடி சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், திருமணத்துக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் பெற்ற 20 கோடி சம்பளத்தை யாரும் இதுவரை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top