↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்த கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் கூல் கேப்டன் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிளில் பெங்களூர் அணி தான் கடைசியில் உள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்துள்ள அந்த அணி இன்று சென்னை அணியை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
சென்னை அணியுடன் மோதும் போட்டியையொட்டி பெங்களூர் அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கோஹ்லி என்ன தான் திட்டம் போட்டாலும் அதை டோணி எளிதில் தவிடுபொடியாக்கிவிடுவார் என்பதால் அந்த அணி எச்சரிக்கையுடன் விளையாட உள்ளது.
பெங்களூர் அணியில் மட்டையை அதாங்க பேட்டை கையில் எடுத்தால் ரன்களை குவிக்கும் கெய்ல் இருக்கிறார் என்றால் சென்னை அணியில் பிரன்டன் மெக்கல்லம் இருக்கிறாரே. மெக்கல்லமும், ட்வெய்ன் ஸ்மித்தும் சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பேயடி அடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதன் சொந்த மண்ணில் இன்று சென்னை அணியை எதிர்கொள்கிறது. எந்த மண்ணாக இருந்தாலும் டோணிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
csk
»
ipl
»
sports
»
sports.tamil
» ஐபிஎல்: சொந்த மண்ணில் சிங்கத்தை எதிர்கொள்ளும் கோஹ்லி பாய்ஸ்
Recent Posts
பஞ்சாப்புக்கு எதிராக சென்னை பட்டாசு வெடி பேட்டிங்..18 ஓவர்களில் 171/3 ரன்கள்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல[...]
முதல் இடம்பிடித்த சென்னை: 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி (வீடியோ இணைப்பு)
பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில[...]
டோனி, ரெய்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய அணித்தலைவர் டோனி மற்றும் ரெய்னா ஆகியோர், தங்களுக்கு சொந்தமான ஹொக்கி அணி வீரர்களுக்கு சம்பளம் [...]
டோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த போட்டி
இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் வ[...]
சமையல்காரன் மகன் இன்று கோடீஸ்வரன்: இது ரொனால்டோவின் கதை
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகிய[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.