
ஸ்டூடியோ கிரின் தயாரிக்க, கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் முத்தையா இயக்கி இருந்த படம் கொம்பன்.
இப்படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக இருந்த நிலையில், படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது, படத்தை தடை செய்யக்கோரி புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
பின்னர் பட ரிலீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு, நீதிபதிகள் முன்னிலையில் படம் திரையிட்டு காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், திரையிடலின்போது வழக்கு தொடுத்தவர்கள் பிரச்சனை செய்து வெளியேற, அதனால் நீதிபதிகளுக்கு அவமரியாதை ஏற்பட்டிருந்தது.
அதேசமயம் கொம்பன் படத்துக்கு ஆதரவாக தமிழ்த்திரையுலகமும் களமிறங்கியது. அவர்கள் கூறியதாவது, படத்தில் சாதி சம்பந்தப்பட்ட எந்த கருத்தும், வசனமும் இடம்பெறவில்லை, அதோடு சென்சாரில் அனுமதி வாங்கிய ஒரு படத்தை இனிமேல் யார் எதிர்த்தாலும், ஒட்டுமொத்த திரையுலகமும் கைகோர்த்துப் போராடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஏப்ரல் 2ம் தேதி வெளியிடுவதாக இருந்த கொம்பன் படத்தை முன்கூட்டியே அதாவது இன்று வெளியிட தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜா முடிவு செய்துள்ளார். இதற்கான முன்பதிவும் ஆன்லைனில் தொடங்கிவிட்டது. ஒரு சில திரையரங்குகளில் காலை சிறப்புக்காட்சியும் இடம்பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.