விராட் கோஹ்லி அடிப்படையில் மிகவும் உணர்ச்சி வசப்படகூடியவர். மைதானத்தில் எப்போது உணர்ச்சி மிக்கவராக இருப்பார். இதனாலேயே அவர் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்வார்.
சமீபத்தில் உலகக்கிண்ணப் போட்டியின் போது அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வைத்து, தனது காதலி அனுஷ்கா குறித்து எழுதியதாக பத்திரிகை நிருபர் ஒருவரிடம் சண்டை போட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது போன்ற அவரது நடத்தைகள் கவனிக்கபட்டு வருவதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கோஹ்லியின் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதை திருத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது அனைத்து நேரங்களிலும் இருக்கும் என்று நான் சொல்லவில்லை.
டெஸ்ட் போட்டியின் புதிய அணித்தலைவர் அணுகுமுறை குறித்து கண்காணித்து வருகிறோம். அதன் பிறகு அவரது அணுகுமுறை மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் வாக், அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மற்றும் சிறந்த அணித்தலைவராக செயல்படுவதற்கு மகேந்திர சிங் டோனியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
0 comments:
Post a Comment