ஒரு நடிகன் என்ன தான் சிறந்த நடிகர் என்று பெயர் வாங்கினாலும், பல விருதுகளை பெற்றாலும் காலம் கடந்து மக்கள் மனதில் நிற்கிறார்களா என்றால் கேள்விக்குறி தான். ஆனால், ரஜினி, கமல் தொடர்ந்து இன்றும் நம் மனதில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர்கள் செய்த கமர்ஷியல் மாஸ் படங்கள் தான். இதை பற்றிய சிறிய தொகுப்பு தான் இந்த பகுதி.
ரஜினிகாந்த்
மாஸின் மறுப்பெயர் ரஜினி தான். தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் மாஸ் சீன்கள் பல இருக்கும்படி பார்த்து கொள்வார். எத்தனை படங்கள் இருந்தாலும், ரஜினி படையப்பா படத்தில் ஊஞ்சலின் மீது அமர்ந்து கால் மேல் கால் போடுவது தான் பல பேரின் ஆல் டைம் மாஸ்.
கமல்ஹாசன்
கமல் எப்போதும் கிளாஸ் வகை நடிகர் தான், ஆனால், சில சில படங்களில் தன் மாஸை எப்படியாவது வெளிப்படுத்துவார். இதில் மிக முக்கியமான படம் வேட்டையாடு விளையாடு. இதை தன் கண்ணை விரித்து காட்டி, எட்றா..என்று சொல்லும் இடத்தில் தியேட்டரில் விசில் பறந்தது.
விஜய்
இளைய தளபதி விஜய்க்கு மாஸ் சீனில் நடிக்க சொல்லிய தரவேண்டும், அசால்ட்டாக 6 அடித்து விடுவார். விஜய் முதன் முதலாக முழு நீள ஆக்ஷன் படத்தில் இறங்கியது திருமலை படத்தில் தான். இதில் வில்லன் இடத்திலேயே சென்று இவர் பேசும் அனைத்து காட்சிகளும், அந்தர் மாஸ் தான்.
அஜித்
அஜித்தின் ஸ்கிரீன் ப்ரசன்ஸ் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, அதிலும் மங்காத்தா படத்தில் அஜித் தோன்று, ஒவ்வொரு காட்சியும் மாஸ் விருந்து தான். இதில் குறிப்பாக இடைவேளை முன்பு அஜித் அந்த செஸ் போர்ட் வைத்து கொண்டு பேசும் காட்சி அரங்கையே அதிர வைத்தது.
சூர்யா
சூர்யா மாஸ்+கிளாஸ் என மாறி மாறி நடிப்பவர். அந்த வகையில் சிங்கம்-2 படம் தான் சூர்யாவின் திரைப்பயணத்தின் பக்கா மாஸ் படம். இதில் பிரகாஷ் ராஜ் வீட்டிற்கு சென்று அவர் பேசும் அனைத்து காட்சிகளும் தியேட்டரில் பட்டையை கிளப்பியது.
0 comments:
Post a Comment