"நிலம் காஞ்சுருச்சுன்னு விவசாயம் பண்ணாம அப்படியே விட்டுட்டா, எப்படிய்யா முப்போகம் பாக்க முடியும்!!!" ஆண்கள் தங்களது உயிருக்கு இணையாக பேணிக்கும் பொருள், மயிர்!! (ஒரு சின்ன குறிப்பு: மயிர் என்பது தான் தூயத் தமிழ் வார்த்தை). சொட்டை விழுந்ததால், தன்னம்பிக்கை இழந்த நபர்கள் எவ்வளவோ பேர் நம் நாட்டில் இருக்கின்றனர்.
சாதாரண ஒரு நபருக்கே இப்படி என்றால் பிரபலங்களுக்கு எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள். வெளியில் தலைக் காட்டவே முடியாது. அனைவரும் நமது தலைவர் "சூப்பர் ஸ்டார்" போல சிம்ப்ளிஸிட்டியாக இருப்பார்களா என்ன. இப்படி முடி நாட்டவர்கள் பட்டியலில் பாலிவுட் தா(த்)தா சல்மான் காணும் அடக்கம் என்பது கொசுறு தகவல்.
சரி, இனி சைடு கேப்பில் சொட்டையில் முடி நட்டு வந்த பிரபலங்களை பற்றி பார்க்கலாம்...
நமது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மேல் மண்டையில் முடி 2000 ஆண்டு முதலே விழ தொடங்கிவிட்டதாம். மொத்தமும் உதிர்வதர்க்குள் உஷாரான கங்குலி, சடாரென்று மருத்துவமனைக்கு விரைந்து தனது கபாலத்தில் முடியை நட்டுக்கொண்டு வந்துவிட்டார்.சாதாரண ஒரு நபருக்கே இப்படி என்றால் பிரபலங்களுக்கு எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள். வெளியில் தலைக் காட்டவே முடியாது. அனைவரும் நமது தலைவர் "சூப்பர் ஸ்டார்" போல சிம்ப்ளிஸிட்டியாக இருப்பார்களா என்ன. இப்படி முடி நாட்டவர்கள் பட்டியலில் பாலிவுட் தா(த்)தா சல்மான் காணும் அடக்கம் என்பது கொசுறு தகவல்.
சரி, இனி சைடு கேப்பில் சொட்டையில் முடி நட்டு வந்த பிரபலங்களை பற்றி பார்க்கலாம்...
இவர் தனது தொப்பையை மறைத்து கணினி வரைப்பட தொழிநுட்பத்தைக் கொண்டு சிக்ஸ் பேக் காட்டிய போதே பல சந்தேகங்கள் எழ தொடங்கின. அதில் ஒன்றான சொட்டை பிரச்சனைக்கு முடிவு கண்டுவிட்டார்கள். உதிர்ந்த முடியை எல்லாம் சரியான எண்ணிக்கையில் தனது தலையில் மீண்டும் நட்டு வைத்திருக்கிறார் சல்மான் கான்!!
நம்ம ஊரு நவரச நாயகன் போலவே முக தோற்றம் உடைய கோவிந்தாவிற்கு, அவரை போலவே, தலையில் மைதானம் ஏற்பட்டுவிட்டதாம். தலையும், தலையும் வைத்தார் போல, தனது தலையில் முடிகளை நட்டுக்கொண்டாராம் கோவிந்தா! (கோவிந்தாவிற்கே, கோவிந்தா!! கோவிந்தா'வா!!!)
ஜெயிலுக்கு போய் வந்தால், "என்னடா கோபாலு, மாமியார் வீட்டுக்கு போயிட்டு வந்துட்டியா?" என்பது நம்ம ஊர் கேலி வழக்கம்! ஆனால், உண்மையிலேயே மாமியார் வீட்டுக்கு போய் வருவதை போல ஜெயிலுக்கு போய் வருபவர், இவர் தான். யார் வைத்த சூனியமோ என்னவோ, ஜெயில் தண்ணி சேராமல் முடி மொத்தமும் கொட்டிவிட்டன. பின் என்ன செய்வது, அனைவரையும் போல இவரும், முடியை நட்டுக் கொண்டார்.
கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லேவின் தலையும் கூட ஒரு காலக்கட்டத்தில் கிரிக்கெட் மைதானத்தை போல தான் இருந்தது. ஆனால், இப்போது முப்போகம் விளைந்த விளைநிலம் போல காட்சியளிக்கிறது. அனைத்திற்கும் காரணம், முடி நட்டு வந்த சிகிச்சை தான்.
0 comments:
Post a Comment