↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரணியன் பாடல், இந்து கடவுளான விஷ்ணுவை அவமரியாதை செய்யும் வகையில் இருப்பதாக கூறி விஸ்வ இந்து பரீஷத் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே உத்தம வில்லன் திட்டமிட்டபடி மே 1ஆம் தேதி ரிலீஸாவதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என தெரியவந்துள்ளது.
இரணியன் பாடலில் இடம்பெற்றுள்ள ஒருசில வரிகள் இந்துக்கடவுளை அவமதிக்கும் வகையில் உள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஸ்வ இந்து பரீஷத் புகார் மனு கொடுத்தது மட்டுமின்றி இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நீதிபதி ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் படத்தை தடை செய்வதற்குண்டான எவ்வித முகாந்திரமும் இந்த மனுவில் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் படத்தின் ரிலீஸுக்கு இருந்த தடை விலகியது.
கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன், நாசர், ஜெயராம், கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை உலகம் முழுவதும் ஈராஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment