உலக நாயகன் கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்' திரைப்படம் பல தடைகளை வெற்றிகரமாக தாண்டி, வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் சிறப்பு காட்சி ஒன்றுக்கு தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சிறப்பு காட்சியை படக்குழுவினர் மற்றும் கமல்ஹாசனுக்கு நெருக்கமானோர் ஆகியோர் வந்திருந்தனர். இந்த படத்தை பார்த்த அனைவரும் கமல்ஹாசனின் புத்திசாலித்தனமான திரைக்கதை மற்றும் வசனங்களை வானளாவிய அளவில் புகழ்ந்ததாகவும், இந்த படம் கமல்ஹாசனை வேறொரு நிலைக்கு எடுத்து செல்லும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக 18ஆம் நூற்றாண்டின் கேரக்டர் மற்றும் 21ஆம் நூற்றாண்டின் சூப்பர் ஸ்டார் என்ற இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ள கமலின் நடிப்பிற்கு மிகச்சிறப்பான விமர்சனம் படம் பார்த்தவர்கள் மத்தியில் இருந்து வெளிவந்துள்ளது.
மேலும் உத்தம வில்லன் படத்தின் பிரமாண்டமான பிரிமியர் காட்சி துபாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த பிரிமியர் காட்சிக்கு படக்குழுவினர் அனைவரும் விரைவில் செல்லவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் உலகம் முழுவதிலும் உள்ள உரிமையை ஈராஸ் இண்டர்நேஷனல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment