கமலின் உத்தம வில்லன் படம் மே 1ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில், இவர் ஐபிஎன் லைவ் சேனலுக்கு பேட்டியளித்த போது தைரியமாகவும், தெளிவாகவும் மாட்டுக்கறி பற்றிய பா.ஜக அரசின் கருத்துக்களை விமர்சித்து தனது கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.
அந்தப் பேட்டியின்போது, மகாராஷ்ட்டிராவில் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டிருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்,“ஒருவர் என்ன சாப்பிடவேண்டும் சாப்பிடக்கூடாது என்பதை அரசாங்கம் முடிவு செய்ய முடியாது. அதை கட்டுப்படுத்தும் உரிமையும் கிடையாது.
மாடுகளைக் கொல்லுவதைத் தடுக்கவேண்டும் என்றால், மீன்கள் உள்பட மற்ற மிருகங்களைக் கொல்லுவதையும் கண்டிப்பாகத் தடுக்கவேண்டும். சில இடங்களில் பிராமணர்களம் மீன் சாப்பிடுகிறார்கள். வேத காலத்தில் பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதாக புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நான் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை என்பது வேறு விஷயம். ஆனால், அதைச் சாப்பிடலாமா? வேண்டாமா? என்பதை அரசாங்கம் முடிவு செய்யக் கூடாது” என்றார்.
0 comments:
Post a Comment