விஜய் டிவி நடத்திய விஜய் அவார்ட்ஸ் பங்கஷனுக்கு கடைசி நேரத்தில் செக் வைத்தது தயாரிப்பாளர் யூனியன். பெரிய படங்களை வாங்குவது, சிறு தயாரிப்பாளர்களை மதிக்காத போக்கு, சினிமா நட்சத்திரங்களை வளைத்துபோட்டு இஷ்டத்துக்கு விழா நடத்துவது, நிகழ்ச்சி நடத்துவது என சினிமாவை நன்றாக பயன்படுத்திக்கொள்ளும் உங்கள் சேனல் ஏன் படங்களை வாங்குவதில் சுணக்கம் காட்டுகிறது என கடுப்பில் இருந்த தயாரிப்பாளர் யூனியன், நேரம் பார்த்து கிடுக்குபிடி போட்டுள்ளார்கள்.
விஜய் அவார்ட்ஸ் பங்கஷனுக்கு யாரும் கலந்துக்க கூடாதுன்னு விழா முதல்நாள் அனைத்து நடிகர்களுக்கும் தகவல் அனுப்ப பட்டது. இதை அறிந்த சேனல் பேச்சுவார்த்தை நடத்தி ஆண்டுக்கு 15சிறிய பட்ஜெட் படங்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்ற கண்டிசனோடு, சங்கத்திக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுக்கணும் என்ற நிபத்தனை போட்டுள்ளனர். அனைத்துக்கும் சம்மதம் தெரிவித்து ஒருவழியா விழாவை நடத்தி முடித்துள்ளது விஜய் டிவி.
0 comments:
Post a Comment