↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
செம்மரக் கடத்தல் விவகாரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த தெலுங்கு நடிகை நீத்து அகர்வாலை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்காப்புக்காக சுட்டதாக ஆந்திர போலீசார் கூறினாலும், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட படுகொலை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஆந்திர போலீசார் நடத்தி வரும் விசாரணையில், பல முக்கிய புள்ளிகள் சிக்கி வருகின்றனர். அந்தவகையில், இந்த கடத்தல் விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த சினிமா நடிகர் சி. சரவணனை சித்தூர் போலீசார் கைது செய்தனர். அவர் மூலம் கர்னூல் மாவட்டம் சாசலமரியைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், படத்தயாரிப்பாளருமான மஸ்தான் வலி, அவரது சகோதரர் பாபாவலி ஆகியோர் பிடிபட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செம்மரக்கடத்தலில் கிடைத்த பணத்தை மஸ்தான் வலி தனது காதலியும் நடிகையுமான நீத்து அகர்வால் வங்கி கணக்கில் போட்டு வைத்து அவர் மூலம் வட மாநில செம்மரக் கடத்தல்காரர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்தது தெரிய வந்துள்ளது. நீத்து அகர்வால் மஸ்தான் வலியுடன் அவரது கர்னூல் வீட்டில் குடித்தனம் நடத்தி வந்து உள்ளார். மஸ்தான் வலியை கைது செய்யும் போது வீட்டில் அவரும் இருந்தார். அப்போது போலீஸ் அவரைக் கைது செய்யவில்லை. ஆனால், மஸ்தான் வலி தன்னைக் குறித்து போலீசில் கூறி விட்ட தகவல் அறிந்த நீத்து அகர்வால், தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து நீத்து மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.
வட மாநிலத்தை சேர்ந்தவரான நீத்து மூலம் தான், மஸ்தான் வலி டெல்லி, குஜராத், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் கடத்தல் தொழிலை விரிவுபடுத்தி உள்ளார். எனவே, நீத்துவின் வங்கி கணக்கில் இருந்து யார் யாருக்கு பணம் அனுப்பப்பட்டு உள்ளது என போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது குறுகிய காலத்தில் பாலுநாயக் என்பவருக்கு பெரிய அளவிலான தொகை அனுப்பப்பட்டு உள்ளது தெரிய வந்தது. அதே போல் பாலுநாயக்கும் பெரிய தொகையை நீத்து அகர்வால் வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் செம்மரக்கடத்தலில் தொடர்புடைய 15 முக்கிய புள்ளிகள் பட்டியலை சேகரித்தனர். இவர்களில் 5 பேர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த நீத்துவை ஆந்திரப் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்படும் விசாரணையில், செம்மரக்கடத்தல் தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment