ஐபிஎல் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 209 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் 210 என்ற கடின இலக்கை நோக்கி பெங்களூர் அணி களமிறங்கியது.
ஆட்டத்தின் 3வது ஓவரின் போது துடுப்பாட்டக்காரர் கிறிஸ் கெய்லுக்கு அருகில் களத்தடுப்பு செய்து கொண்டிருந்த பொல்லார்ட்டை அழைத்த நடுவர், ஸ்லெட்ஜிங்கில் (வாக்கு வாதத்தில்) ஈடுபடக்கூடாதென்று எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் நடுவரின் உத்தரவை கேலி செய்யும் விதமாக, பொல்லார்ட் தனது வாயில் செல்லோ டேப்பை ஒட்டிக்கொண்டு மைதானத்திற்குள் திரிந்தார்.
இந்த சம்பவத்தை பெரிதாக்க வேண்டாம் என்று மும்பை வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சிலர் கூறியிருந்தாலும், முன்னாள் வீரர்கள் பொல்லார்டின் செயல் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் மும்பை- டெல்லி ஆட்டத்தின் போது கமெண்டரி அறையில் இருந்த சுனில் கவாஸ்கரிடம் பேசிய நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டவுல், பொல்லார்டை ஒன்றிரெண்டு போட்டியிலாவது தடை செய்திருக்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து கருத்து தெரிவித்து கவாஸ்கர், சைமன் டவுல் கருத்துக்கு தான் உடன்படுவதாகவும், நடுவரின் முடிவை பொல்லார்ட் கேலிக் கூத்தாக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாம், இதுகுறித்து பொல்லார்ட்க்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment