ரஜினி, அஜீத்துக்கு பிறகு தனக்கு தான் விசில் பறக்கிறது என்று பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். லத்திகா என்ற படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன். பணம் மற்றும் பிரியாணி கொடுத்து தியேட்டர்களில் அந்த படத்தை அவர் 100 நாட்களுக்கு ஓட்டியதை அவரே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் சந்தானம் பவரை கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிக்க வைத்தார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் முழுக்க சந்தானம் பவர் ஸ்டாரை நக்கலடித்துக் கொண்டிருந்தார். அந்த படத்திற்கு பிறகு படுத்துக் கிடந்த பவரின் மார்க்கெட் நிமிர்ந்து நின்றது. பவருக்கும் ஓவர் கான்பிடன்ஸ் வந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டி என்றால் அது இந்த பவர் ஸ்டார் தான் என்று பவர் அடிக்கடி தெரிவித்து வருகிறார். இதனால் ரஜினி ரசிகர்கள் பவர் மீது கொலவெறியில் இருந்தாலும் தங்களின் தலைவருக்காக அமைதியாக உள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கவே இந்தா அந்தா என்று ஆண்டுகளை கடத்தி ஒரு வழியாக நடித்தவர் ஐஸ்வர்யா ராய். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் தான் எனக்கு ஏற்ற ஜோடி. அவருடன் நடிக்க வேண்டும் என்று பவர் தெரிவித்துள்ளார்.
பவர் ஸ்டார் மோசடி வழக்கில் திஹார் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சினிமா விழாக்களில் கலந்து கொண்டு பஞ்ச் வசனங்களாக பேசி மக்களின் கைதட்டல்களை பெற்றார். அவர் பேசும் மேடையில் எல்லாம் அவருக்கு கைதட்டலும், விசிலும் காதை கிழிக்கும். பவர் ஆள் வைத்து கைதட்ட வைக்கிறார் என்று கூட கூறப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது விழா பற்றி பவர் கருத்து தெரிவித்துள்ளார். யார் விருது வாங்குகிறார்கள் என்பது முக்கியம் அல்ல. ஆனால் யார் பெயரை கூறினால் விசில் பறக்குது என்பது தான் முக்கியம். ரஜினி, அஜீத்தை எடுத்து எனக்கு தான் விசில் பறக்குது என்று தெரிவித்துள்ளார் பவர்.
0 comments:
Post a Comment