ஹல்க், கேப்டன் அமெரிக்கா, தோர், அயர்ன் மேன் என தனி தனியே வந்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர்கள், 2012-ல் கூட்டணி அமைத்து கலக்கிய படம் “அவெஞ்சர்ஸ்”. இப்படம் திரைக்கு வந்து ஹாலிவுட், கோலிவுட் என இரு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. மேலும் அதிக வசூலையும் ஈட்டியது.
இதன் தொடர்ச்சியாக இவர்களின் கூட்டணியில் தற்போது “அவெஞ்சர்ஸ் பாகம்-2 (ஏஜ் ஆஃப் அல்ட்ரான்”) என்ற பெயரில் 24-04-2015 அன்று திரைக்கு வந்தது. இப்படம் பற்றிய கருத்துகளாக “திஸ் மூவி இஸ் மைண்ட் ப்ளோயிங்க் மூவி” என ரசிகர்களின் அலறல் திரையரங்கு எங்கிலும் ஒலித்தது.
இப்படம் முதல் பாகத்தின் வெற்றியைவிட மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. படம் வெளியாகி இரண்டு நாட்களில் 286 கோடிக்கும் மேல் வசூலைப் பெற்றுள்ளது. மேலும் பல கோடிகள் பெற்று சமீபத்தில் வெளியான “ஃபாஸ்ட் அண்ட் ஃபுயூரியஸ்-7” படத்தின் வசூலையும் தாண்டி அதிக வசூலை ஈட்டி இந்த வருட வசூல் சாதனையில் முதல் இடத்தை இப்படம் பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.