↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
'யான்' படத்திற்கு பின்னர் ஜீவா நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் 'கவலை வேண்டாம்'. இந்த படத்தில் ஜீவாவுடன் தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது நடிகை நிகில் ராணியும் இந்த படத்தில் இணைகிறார். இவர் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 'டார்லிங்' என்ற வெற்றிப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொமாண்டிக் மற்றும் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் 'கவலை வேண்டாம்' படத்தை ஆர்.எஸ்.என்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த நிறுவனம் ஏற்கனவே ஜீவா நடித்த 'கோ' என்ற படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை 'யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டிகே இயக்கவுள்ளார்.
எஸ்.என்.பிரசாத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்த படத்தை முகேஷ் ஒளிப்பதிவும், அந்தோணி ரூபன் எடிட்டிங்கும் செய்யவுள்ளனர். இந்நிலையில் ஜீவா மற்றொரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த படத்தின் ஸ்கிரிப்டை அட்லி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment