லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் படம் சூர்யாவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத படம் என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் மத்தியில் சில மாதங்களுக்கு அஞ்சான் படத்தை பற்றிய பேச்சு ஓயவே இல்லை அப்படி ஒரு ஹிட் ஸாரி பிளாப்.
அஞ்சான் படத்தின் தோல்வியை மக்கள் மனதில் இருந்து தூக்க வேண்டும் என்பதற்காகவே வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ்ஸாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று திட்டமிட அவர் படத்திற்கே மாஸ் என்று பெயர் வைத்துவிட்டார். மாஸ் படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது, அதில் சூர்யா சிங்கம் படத்தில் பேசிய டயலாக்கையே சற்று மாற்றி எதிர்பார்க்கல இல்ல நான் இப்படி திரும்பி வருவேன்னு எதிர்பார்க்கல இல்ல என்று பேசும் வசனம் லிங்கசாமிக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது என்று நண்பர்களிடம் புலம்பிவருகிறாராம்.
ஏன்னா இது லிங்குசாமியின் அஞ்சான் பட தோல்வியிலிருந்து தான் மீண்டுவந்ததாக சூர்யா சொல்வது போல் உள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. மாஸ் படத்தை அடுத்து விக்ரம் குமார் இயக்கத்தில் 24 என்ற படத்தில் நடித்து வரும் சூர்யா அதை அடுத்து சதுரங்கவேட்டை இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ள புதிய படத்தையும் தன்னுடைய 2டி பேனரிலேயே தயாரிக்க திட்டமிருந்தார் சூர்யா.
ஆனால் லிங்குசாமி தனக்கு அஞ்சான் படத்தின் மூலம் நிறைய நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது எனவே வினோத் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தை திருப்பதி பிரதர்ஸ் பேனரில் தயாரித்து நஷ்டத்தை சரிகட்டிக் கொள்கிறோம் என்று கேட்க உடனே சூர்யாவும் சரி என்று கூறிவிட்டாராம்.
பின்ன இருக்காத நம்ம நோ சொல்லி திரும்ப கால்ஷீட் கேட்டுட்டா…அதுக்கு பயந்துதான் ஒகே சொல்லிருப்பாரோ…
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.